Tuesday, January 1, 2013

முட்டை வறுவல்

தேவையான பொருட்கள்
  • முட்டை - 4
  • கடலை மாவு - 2 டீஸ்பூன்
  • அரிசிமாவு - 3 டீஸ்பூன்
  • கார்ன் மாவு - 2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு
  • அரைத்த மல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
  • முட்டையை அவித்து நீளவாக்கில் இரண்டாக மஞ்சள் கரு உடையாமல் நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய முட்டைகளை மல்லி, புதினா விழுதில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • மாவு வகைகள், உப்பு, மிளகாய்த்தூளை சிறிது நீர் தெளித்து பிசறி முட்டைகளை அந்த மாவில் பிரட்டி எடுக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முட்டைகளை மெதுவாக போடவும். சுற்றிலும் மீண்டும் எண்ணெய் விடவும். சிவந்ததும் மறுபுறம் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுக்கவும்.
  • பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி சாதத்துடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More