Tuesday, January 1, 2013

காளான் வறுவல்

தேவையான பொருட்கள்
  • காளான் - 15
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - 1/2 ஸ்பூன்
  • வதக்குவதற்கு:
  • வெங்காயம் - 1/2
  • பூண்டு - 2 பல்
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
  • முதலில் காளானை மூன்று துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக சாப் செய்து வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்
  • காளானில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள் கலந்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் காயவைத்து பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ஒரு சிட்டிகை சர்க்கரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் காளானும் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு வைக்கவும்.
  • திறந்து பார்த்தால் தண்ணீர் பெருகியிருக்கும். இனி மெல்ல கிளறி விட்டு அந்த தண்ணீரை வற்ற வைக்க வேண்டும். ட்ரையானதும் இறக்கிவிடவும். ஐந்தே நிமிடத்தில் காளான் வறுவல் ரெடி.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More