Monday, December 31, 2012

மஃபின்ஸ்

என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 கப், 
சமையல் சோடா, 
பேக்கிங் பவுடர் - தலா 1 சிட்டிகை, 
வெண்ணெய் - அரை கப், 
கன்டென்ஸ்டு மில்க் - அரை கப், 
சுண்டக் காய்ச்சிய பால் - அரை கப், 
வெனிலா எசென்ஸ் - சிறிது, 
அலங்கரிக்க - செர்ரி பழங்கள், ஜாம்.


எப்படிச் செய்வது?
வெண்ணெயை கரண்டியால் நன்கு அடிக்கவும். மைதாவுடன் சமையல் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து 2 முறை சலிக்கவும். இந்த மாவை சிறிது, சிறிதாக வெண்ணெய் கலவையில் சேர்த்து அடிக்கவும். இத்துடன் கன்டென்ஸ்டு மில்க், பால், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து, வெண்ணெய் தடவிய அலுமினிய கப்புகளில் ஊற்றி, 5 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் வைத்து,
பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். செர்ரி பழங்கள் மற்றும் ஜாம் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.அவன் இல்லாதவர்கள், மணல் போட்ட குக்கரில் வெயிட் போடாமலும் பேக் செய்யலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More