என்னென்ன தேவை?
மைதா - 1 கப்,
சர்க்கரை - அரை டீஸ்பூன்,
ஈஸ்ட் - அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்,
பால், வெண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
பாகு செய்ய...
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - கால் கப்.
சாக்லெட் சாஸ் செய்ய...
ஏதாவது ஒரு சாக்லெட் பார் - 1,
வெண்ணெய் - சிறிது,
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்.
அலங்கரிக்க...
ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் - சிறிது.
எப்படிச் செய்வது?
பாலை லேசாக சுட வைத்து, அதில் சர்க்கரையையும், ஈஸ்ட்டையும் சேர்த்துக் கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும். அது நுரைத்து வரும். மைதா, பேக்கிங் பவுடருடன், ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஈஸ்ட் கலவையுடன், மைதா கலவையைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்துக்குப் பிசைந்து மூடி வைக்கவும். ஈஸ்ட் சேர்த்ததால், 20 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் மாவு நன்கு உப்பியிருக்கும். அதிலிருந்து எலுமிச்சம்பழ அளவு மாவை எடுத்து, உருண்டையாக உருட்டி, வட்டமாகத் தட்டி, பாட்டில் மூடி அல்லது பிஸ்கட் கட்டரால், கனமான வட்டமாக வெட்டி, பிறகு வேறொரு சின்ன மூடியால் அதன் நடுவே (ஒரு டிசைனுக்காக) அழுத்தவும்.
எல்லா மாவையும் இப்படிச் செய்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும். வடை மாதிரி உப்பிக் கொண்டு, இரு புறமும் பொன்னிறத்துக்கு வரும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையில் கம்பிப் பாகு காய்ச்சவும். பொரித்து வைத்துள்ள டோனட்டுகளை சூடான பாகில் போட்டு எடுத்து வைக்கவும். சாஸ் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து பாகு மாதிரிக் காய்ச்சி, இந்த டோனட்டுகளின் மேல் ஒரு டீஸ்பூன் ஊற்றி, ட்ரை ஃப்ரூட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

0 comments:
Post a Comment