Tuesday, January 1, 2013

தாமரைதண்டு வறுவல்

தேவையான பொருட்கள்
  • தாமரைதண்டு - 1 கணு
  • மிளகாய்த்தூள் - 2 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
  • கார்ன் ஃப்ளார் மாவு - 2 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை
  • முதலில் தாமரைத்தண்டை தோலுரித்து சிறு சிறு வட்டங்களாக மெல்லியதாக நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கார்ன் ஃப்ளார் மாவு, தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும்.
  • அதில் கடைசியில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைத்துவைக்கவும்.
  • வெட்டி வைத்துள்ள தாமரைத்தண்டை கலவையில் போட்டு பிரட்டி சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் ஊறவைத்துள்ள தாமரைத் தண்டை போட்டு பொரித்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More