ஜவ்வரிசி - ஒரு கப், தயிர் - ஒரு கப், வெள்ளரிக்காய் துருவல் - கால் கப், கேரட் துருவல்- கால் கப், பச்சை திராட்சை - கால் கப், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ - தலா ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியில் தண்ணீர் விட்டு கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும். முத்து போன்று உதிரியாக இருக்கும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ தளித்து, இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில், ஆவியில் வேக வைத்த ஜவ்வரிசி, தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வறுத்து வைத்த மசாலாவை போட்டு கிளறவும். வெள்ளரிக்காய், கேரட், பச்சை திராட்சை, புதினா, கொத்தமல்லி போட்டு கலந்தால்... தஹி பிரியாணி தயார்.
0 comments:
Post a Comment