தேவையானவை:
கெட்டி அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், பச்சைப் பட்டாணி, கேரட் துண்டுகள் - தலா 2 ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அவலை தண்ணீர் தெளித்துப் பிசிறி 10 நிமிடம் ஊற வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் சேர்த்துக் கிளறவும். காய்கறி வெந்து வரும் சமயம் பிசிறி வைத்துள்ள அவலை சேர்த்து லேசாக கலந்து கிளறவும். அவல் வெந்ததும் இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவி அலங்கரிக்கவும்.
இது, விரைவில் தயாரிக்கக் கூடியது. எல்லோருக்கும் ஏற்றது.

0 comments:
Post a Comment