Tuesday, January 1, 2013

ட்ரை ஃப்ரூட்ஸ் பிரியாணி

தேவையானவை:  
பாசுமதி அரிசி - ஒரு கப், பாதாம் - 6, முந்திரி - 6, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி (பல கலர்) - தலா 2 டீஸ்பூன், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) 4, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா 2, உப்பு - சிறிதளவு.


 செய்முறை: 

அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது நெய் விட்டு, சூடானதும் பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து, திராட்சை, பேரீச்சம்பழ துண்டுகள், டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து லேசாக புரட்டி எடுக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சாதத்தை மசாலா கலவையில் சேர்த்துக் கலந்து, தீயைக் குறைத்து 2 நிமிடம் வைத்து கிளறி எடுக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸ் கலவையை கலந்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More