Tuesday, January 1, 2013

இறால் கூட்டு

தேவையான பொருட்கள்
  • இறால் - அரை கிலோ (உரித்தது)
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • வெங்காயம் - 2 பெரியது
  • தக்காளி- 2 பெரியது
  • மிளகாய் - 2
  • மல்லி இலை - சிறிது
  • சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
  • சீரகப்பொடி - அரை ஸ்பூன்
  • பெருஞ்சீரகத்தூள் -கால் ஸ்பூன்
  • தயிர் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

 செய்முறை
  • இறாலை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிகொள்ளவும். இறால், சிறிது உப்பு, 1டீஸ்பூன் சில்லி பவுடர், 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, மல்லி இலை, மிளகாய் கட் செய்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதங்கியவுடன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். தக்காளி, மல்லி இலை, மிளகாய், உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைக்கவும். பின்பு சில்லி பவுடர், சீரகப்பொடி, பெருஞ்சீரகப்பொடி சேர்த்து வதக்கவும்.
  • இறாலை சேர்த்து நீர் விடுவதால் தீயை கூட்டி வைத்து இறால் வெந்தவுடன் சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து கெட்டியாகி இறக்கவும்.
  • சுவையான இறால் கூட்டு ரெடி.இதனை எல்லாவகை சாதத்துடனும் பரிமாறலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More