Monday, December 31, 2012

பிரண்டைத் துவையல்


வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8.  வேறு மிளகாய்
ஆனால்  காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய  நீண்ட அளவு  2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி  சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு .   மிளகு—6 எண்ணிக்கையில்
தேங்காய்த் துருவல்–2 டேபிள்ஸ்பூன்
பிரண்டையை   தண்ணீரில்   அலம்பித்    துடைக்கவும்.
இளம் பிரண்டை—4பாகங்கள்.  நடு கணுவை நீக்கி   நறுக்கவும்.
இரண்டு பாகத்தையும்    சேர்க்கும் இடம்  கணுவு .   கரும்புடைய
ஜாயின்ட் மாதிரி.
பிரண்டைக்கு    நறுக்கிய பாகம்   தொட்டால்   சிறிது  அறிக்கும்
தன்மை  உண்டு.
நறுக்கியதைக் கரண்டியால் எடுக்கவும்.

செய்முறை:
முதலில்  வாணலியில்   எண்ணெயைக்  காயவைத்து நறுக்கியபிரண்டையை   சிவக்க   வறுத்து   எடுக்கவும்.
பின்னர்  நறுக்கிய    இஞ்சியையும்     வதக்கி எடுக்கவும்.பருப்புகளையும்.மிளகாய்,    பெருங்காயத்தையும் சிவக்க வறுத்து
எள்ளையும்   சேர்த்து   வறுத்து இறக்கவும்.புளி, மிளகாய்,   இஞ்சி,   வதக்கிய பிரண்டை,   தேங்காய்த் துருவல்  யாவற்றையும்   சிறிது   தண்ணீர்  தெளித்து    மிக்ஸியில் மசியஅறைக்கவும்.மிகுதி  வருத்த    ஸாமான்கள்   உப்பு  சேர்த்து   மேலும் சற்றுகரகர பதத்தில்  கெட்டியான  துவையலாக  அரைத்தெடுக்கவும்.
துவையலில்   காரல் ஒன்றும்  இருக்காது.   சாதத்தில் நெய்சேர்த்துச் சாப்பிட  ருசியாக இருக்கும்.பச்சைமோர்,   மோர்க்குழம்பு  என  தொட்டுக் கொண்டுசாப்பிட    ருசிதான்.சிரார்த்த   துவையலில்.  தேங்காயிராது.   கறிவேப்பிலையும்எள்ளுண்டையும்  வைத்து  பருப்புகள்,மிளகாய்,  புளி சேர்த்துஅரைப்பார்கள்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More