Monday, December 31, 2012

சுட்டரைத்த துவையல்


வேண்டியவைகள்:
கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும்   குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில்,   அதன்   பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.
திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,
வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்
.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்
இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.
நன்றாக மசிந்த பின்  உளுத்தம்பருப்பைச் சேர்த்துக்  கொரகொரப்பாக  அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.
கடுகு,  பெருங்காயப் பொடியை,  மிகுதி எண்ணெயில்  தாளிதம் செய்யவும்.
நல்லெண்ணெய்,   நெய்  சேர்த்து  சாதத்துடன்  சாப்பிட  மிகவும் ருசியாகஇருக்கும்.
வெங்காயத்திற்குப் பதில்   தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து அரைக்கலாம்.
புளி சேர்த்த துவையலில்    சிவக்க வறுத்த வெந்தயம்  ருசியைக் கொடுக்கும்.
சுட்ட கத்தரிக் காயுடன்  துளி,தேங்காய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்தரைத்து
தயிரில் கலந்து  கடுகு தாளித்தால்  பச்சடி தயார்.


இப்படி சுட்ட  கத்தரிக் காயில்  அநேகவிதம் தயாரிக்கலாம்.
அரைக்கும் போதே   கொத்தமல்லி  கறிவேப்பிலையை மறக்க வேண்டாம்.
உப்பு காரம் ,  தேவைக்கேற்ப  அதிகரிக்கலாம்.
பர்த்தா தயாரிப்பதும்    இப்படி  சுட்ட  கத்தரிக்காயில்தான்.
கத்தரிக்காய் சேர்க்கும்  பத்திய  சமையலில்   சுட்ட காயை மசித்து
துளி நெய்யில்  கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு,  பெருங்காயம் தாளித்து,
உப்புபோட்டு கொடுப்பார்கள்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More