Tuesday, January 1, 2013

நண்டு சூப்

தேவையான பொருட்கள்
  • நண்டு - அரை கிலோ
  • வெங்காயத் தாள் - 3
  • பச்சை மிளகாய் - 2
  • பூண்டு - 4 பல்
  • இஞ்சி - ஒரு துண்டு
  • மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
  • கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
  • அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி
  • பால் - கால் கப்
  • வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
 செய்முறை
  • நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்கவும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். (இல்லையென்றால் அப்படியேகூட போடலாம்).
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். (பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைக்கவும்).


  • வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More