Wednesday, January 2, 2013

தயிர் வடை

என்னென்ன தேவை?
உளுந்து - 1 கப்,
புளிக்காத தயிர் - 2 கப்,
பால் - கால் கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள:
தேங்காய் துருவல் - அரை கப்,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - அரை டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 6.
அலங்கரிக்க:
கேரட் துருவல் மற்றும் கொத்தமல்லி.

எப்படிச் செய்வது?
உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். உப்பு சேர்த்து எண்ணெயில் வடைகளாகத் தட்டி எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்து, தயிர் மற்றும் பால் சேர்த்துக் கலக்கவும். பொரித்து வைத்துள்ள வடைகளை ஒரு தட்டில் அடுக்கி, அதில் தயிர் கலவையை ஊற்றவும். விருப்பப்பட்டால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம். கடைசியாக கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More