Tuesday, January 8, 2013

மால் புவா


தேவையான பொருட்கள்;-
கோதுமை மாவு              -1கப்
பால்                         -1/2 கப்
மிளகுத்தூள்                   1 டேபிள் ஸ்பூன்
சோம்பு                        1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை                        1/2 கப்
தயிர்                          -1/4 கப்
பிஸ்தா                         -2 டேபிள் ஸ்பூன்
தேவையான அளவு எண்ணெய் உப்பு

செய்முறை;-
சர்க்கரையில் ஒரு டேபிள் ஸ்பூன அளவு தனியே எடுத்து வைக்கவும். மற்ற சர்க்கரையுடன் 1 கோப்பை நீர்
விட்டு ஒற்றை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.கோதுமைமாவில் சோம்பு  மிளகுத்தூள்
ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை பால் தயிர் உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீரும் விட்டு தோசைமாவு
பதத்தில் கரைத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கரைத்து
வைத்த மாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்து ஊற்றி அப்பம் போல சுட்டு எடுத்து தயாராக இருக்கும் சர்க்கரை
பாகில் போடவும்.அடுத்து சுட்ட அப்பத்தை பாகில் போடும் பொழுது ஊறிய அப்பத்தை எடுத்து தட்டில் வைத்து
விடவும். 2 நிமிடம் ஊறினால் போதுமானது.பிஸ்தா பருப்புக்களை தூவி அலங்கரித்து பரிமாறவும்.இது
பிரபலமான ராஜஸ்தானி இனிப்பு வகையாகும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More