Tuesday, January 8, 2013

உருளை கோஃப்தா கறி


தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக் கிழங்கு     – 1கப்
ரொட்டித்தூள்                      – 2டேபிள் ஸ்பூன்
உப்பு                              -சிறிதளவு
ஒரு பவுலில் இத்னைத்தையும் தனியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இதன் உள்ளே வைப்பதற்கான பூரணத்திற்கு தேவையானவைகள்:
தேங்காய் துருவியது      -4 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் -2
நறுக்கிய பாதாம் முந்திரி -2ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லிதழை-சிறிதளவு
உப்பு சக்கரை              -சிறிதளவு

செய்முறை :
மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் ஒரு பவுலில் தனியாக கலந்துக் கொள்ளவும்.
பிசைந்த உருளைக்கிழங்கை உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
உருண்டைகளை குழி செய்து இதன் உள்ளே பூரணத்தை வைத்து மூடவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
பொறித்த உருண்டைகளை தனியாக வைக்கவும்.
கிரேவி செய்வதற்கு;-
1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.

2. இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.
3. தக்காளியை அரைத்துப் போடவும்.
வரமிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சக்கரை சிறிதள்வு சேர்க்கவும்.
தேவையான உப்பு சேக்கவும்
கடைந்த தயிர் 1கப் சேர்க்கவும்.
எண்ணெய் பிரியும்வரை கொதிக்கவிட்டு சிம்மரில் வைத்து பொறித்த உருண்டைகளைப் போடவும்.
மேலே ஃரெஷ் கிரீமும் கொத்தமல்லித்தழையும் சேர்க்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More