Tuesday, January 1, 2013

வெஜ் பிரியாணி

தேவையான பொருட்கள்
  • பாஸ்மதி அரிசி - கால்கிலோ
  • உறித்த பச்சைப்பட்டாணி - 50 கிராம்
  • கேரட் - 50 கிராம்
  • பீன்ஸ் - 50 கிராம்
  • கோஸ் - 50 கிராம்
  • குடைமிளகாய் - 50 கிராம்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • பூண்டு - 8 பல்
  • மஞ்சத்தூள் - அரைடீஸ்பூன்
  • மிளகாத்தூள் - ஒருஸ்பூன்
  • கரம் மசாலாத்தூள் - ஒருஸ்பூன்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • நெய், வெண்ணெய் - 2+2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்துமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு


செய்முறை
  • அரிசியை நன்கு கழுவி குறைந்தது அரை மணி நேரமாவது ஊறவைக்கவும்.
  • எல்லா காய்களையும் பொடிசாக அறிந்து கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, வெங்காயம் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • குக்கரில் வெண்ணெய் போட்டு காய்களை மிருதுவாக வதக்கவும்.
  • வதங்கியதும்,மஞ்சப்பொடி,கரம் மசாலாப்பொடி,மிளகாத்தூள் போட்டு வதக்கவும்.அரைத்த விழுதைச்சேர்க்கவும்.

  • அதன்மேல் ஊறின அரிசியைச்சேர்த்து நன்கு கிளறவும்.
  • உப்பையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிடவும்.
  • ஆறினதும்,குக்கரைத்திறந்து பொடிசாக நறுக்கிய கொத்துமல்லி, நெய் போட்டு நன்கு கலக்கவும்.
  • சூடாகப்பரிமாறவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More