Monday, December 31, 2012

மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை :

 
மீல் மேக்கர் - 20கத்திரிக்காய் - 3 (வெள்ளை கத்திரிக்காய்)
சின்ன வெங்காயம் - 20தக்காளி - 1 (சிறியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
புளி,பூண்டு, சிறிய நெல்லிக்காய் 
அளவுமாங்காய் - 1 
சிறியதுமிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
மல்லி இலை - 1 கொத்து.
தாளிக்க:கடுகு, உ.பருப்பு, 
வெந்தயம்,சீரகம், கறிவேப்பிலை,
எண்ணைய் - சிறிது
உப்பு - தேவைக்கு.


 செய்முறை :

மீல் மேக்கரை சுடு நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். கத்தரிக்காய், மாங்காய், தக்காளி,வெங்காயம் இவற்றை நறுக்கி கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.  
சிறிது வெங்காயம், தக்காளி, மிளகாய்,தேங்காய் இவற்றை தனியே மிக்சியில் அரைத்து கொள்ளவும். மீதி தேங்காயை, சிறிது சீரகம் சேர்த்து அரைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,கறிவேப்பிலை,வெங்காயம் போட்டு தாளிக்கவும். 

மஞ்சள் தூள்  சேர்க்கவும். பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் புளி கரைத்து ஊற்றவும். இதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

சிறிது நீர் சேர்த்து மீல் மேக்கரை போடவும். அவை வெந்ததும் அரைத்த தேங்காயை போடவும். நன்கு கொதித்ததும் மல்லி இலை போடவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More