தேவையான பொருள்கள்:-
கோதுமை மாவு – 2கப்
மில் மேக்கர் – 1/2கப்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
சோம்பு – 1ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1/2கப் பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
மிளகு தூள் – 1ஸ்பூன்
கரம் மசாலா – 1ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1/4கப்
தயிர் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
- முதலில் கோதுமை மாவு , உப்பு, தேவையான தயிர் ஆகியவற்றை சேர்த்து மாவை நன்கு பிசைந்து உருட்டிக் கொள்ளவும்.
- பின்பு மில் மேக்கரை 3மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். ஊறவைத்த பின்பு மில் மேக்கர் ஊறிஞ்சிய தண்ணீரை பிளிந்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் வரும் வரை நன்கு வதக்கவும்.
- அதனுடன் வெட்டிய மில் மேக்கர், மிளகாய்
தூள், மிளகு தூள், கரம் மசாலா, கொத்த மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து
பச்சை வாசனை போகும் வரும் வரை நன்கு வதக்கவும்.
வதக்கிய கலவை ஈர பதமாக இல்லாமல் நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். - பின்பு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி கல்லில் சிறிது கோதுமை மாவை தூவி வட்ட வடிவமாக தேய்க்கவும்.
- தேய்த்த சப்பாத்தியின் நடுவில் கெட்டியாக உள்ள மசாலாவை 1ஸ்பூன் வைத்து 4 பக்கமும் மடித்து மறுபடியும் சப்பாத்தி கல்லில் கோதுமை மாவை தூவி சப்பாத்தியை கொஞ்சம் கனமாக தேய்க்கவும். இதே போல் அனைத்து சப்பாத்தி மாவையும் தேய்த்து தயாரித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக் கல் காய்ந்ததும் தேய்த்த சப்பாத்தி அதில் போடவும். முதலில் எண்ணெய் ஊற்றாமல் இருபக்கமும் நன்கு வேக வைத்த பின்பு எண்ணெய் ஊற்றி பொன்றிநம் வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
- சுவையான மசாலா சப்பாத்தி தயார்.



0 comments:
Post a Comment