Thursday, January 3, 2013

வெந்தயக்கீரை சப்பாத்தி


தேவையான பொருள்கள்:-
கோதுமை மாவு – 3கப்
வெந்தயக்கீரை – 1கப் சிறியதாக நறுக்கிக் கொள்ளவு
மஞ்சள் தூள் – 1சிட்டிகை
தயிர் – சப்பாத்திமாவு பிசையும் அளவிற்கு
சின்ன வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பூண்டு – 4 பொடியாக நறுக்கியது
ஓமம் – 1 சிட்டிகை
சீரகம் – 1சிட்டிகை
பச்சைமிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – சிறிதளவு
செய்முறை:-
முதலில் வாணெலியில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், ஓமம் இரண்டையும் வறுக்க வேண்டும்.
பின்பு வெங்காயத்தை பொன்நிறமாக வதக்கியவுடன் பூண்டையும் பச்சை மிளகாயையும் வதக்க வேண்டும்.
அதில் வெந்தயக்கீரையுடன் சிறிது உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக சுருங்கும் அளவிற்கு வதக்க வேண்டும்.
வதக்கியவுடன் ஆற வைக்க வேண்டும்.
பின்பு கோதுமை மாவில் வதக்கிய கலவையையும் மாவிற்கு தேவையான உப்பும் வெண்ணெயையும் சேர்த்து பிசையவும்.
மாவு பிசைவதற்கு நீர் பதத்தவில்லையென்றால் தயிர் சேர்த்து சப்பாத்தி மாவுபதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த சப்பாத்திமாவை 1மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்பு சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக எடுத்துக்கொண்டு கோதுமை மாவில் புரட்டி மாவைத் வட்ட வடிவமாக தேய்த்துக் கொள்ளவும்.
தோசைக்கல் காய்ந்ததும் சாப்பாத்தியைப் போடவும்.முதலில் 2பக்கமும் எண்ணெய்யில்லாம் திருப்பி போடவும். நன்றாக 2பக்கமும் எண்ணெயைத் தடவி நன்றாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.

இதனுடன் துணைக்கு எதுவும் தேவையில்லை. அப்படி தேவையென்றால் காரட் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.
இந்த சப்பாத்தியை சாப்பிட மிகவும் சுவையாகவும் புதுமையாகவும் இருக்கும். 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More