தேவையானவை:
- அரிசி மாவு - 200 கிராம்
- மைதா மாவு - 50 கிராம்
- வாழைப்பழம் - 2
- பால் - 50 மில்லி
- சர்க்கரை - ஒரு கரண்டி
- உப்பு - ஒரு சிட்டிகை
- நெய் - தேவையான அளவு
செய்முறை:
- வாழைப்பழத்தைக் கடைந்து பாலுடன் சேர்த்துக் குழைத்துக் கொள்ள வேண்டும்.
- இத்துடன் அரிசி மாவு, மைதா மாவு இவற்றைக் கலக்க வேண்டும்.
- நன்றாகக் கலந்த பிறகு சர்க்கரையையும் உப்பையும் போட்டு அரை மணி நேரம் ஊறவிட வேண்டும்.
- பிறகு தோசைக் கல்லை காய வைத்து மாவைக் கெட்டியாகச் சிறிய அளவில் ஊற்றி நெய் விட்டு வார்த்தால் வாழைப்பழத் தோசை ரெடி.



0 comments:
Post a Comment