Thursday, January 3, 2013

கோதுமை மாவு தோசை


தேவையான பொருள்கள்:-
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1/2கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – 1கொத்து
பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
  • கோதுமை மாவு, உப்பு, அரிசி மாவு ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக கரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி கலக்கிய மாவில் சேர்ந்து கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல் காய்ந்ததும் முதலில் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி நடுவில் மாவை ஊற்றாமல் சுற்றி ஊற்றி நடுவில் வந்ததும் எல்லாப் பக்கமும் தேய்த்து விடவும். அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவிடவும்.
  • நன்றாக வெந்தததும் பின்புறம் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
  • சுவையான smile.gifகோதுமை மாவு தோசை தயார். wink_smile.gif

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More