Thursday, January 3, 2013

பட்டாணி அரிசிமாவு ரொட்டி


தேவையான பொருள்கள்:-
அரிசி மாவு – 1கப்
பச்சை பட்டாணி – 1/2கப்
சோம்பு கீரை, கொத்தமல்லி தழை – 1/4கப்
சிரகம் – 2ஸ்பூன்
தேங்காய் – 1/4கப் துருவியது
பச்சைமிளகாய் விழுது – 1ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
  • முதலில் மாவு பிசைவதற்கு தேவையான தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • பட்டாணியை பாதி வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அகன்ற கிண்ணத்தில் அரிசி மாவு, வெந்த பட்டாணி, கீரை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் விழுது, துருவின தேங்காய், சிரகம், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
  • கலந்த கலவையை கொதித்த தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் அடுப்பில் தோசைக்கல் சூடானததும் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்ததில் கையளவு உருண்டையை எடுத்து நேரடியாக தோசைக்கல்லில் வட்டவடிவத்தில் தட்டவும். ரொம்ப மெல்லிதாக தட்டவேண்டாம்; பட்டாணி இருப்பதால் கொஞ்சம் கனமாக தட்டிக் கொள்ளவும்.
  • அதன் மேலே சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொன்நிறம் வரும் வரை வேக விடவும்.
  • நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
  • இதில் பச்சைபட்டாணிக்கு பதிலாக பச்சைமொச்சைக்காய், துவரைக்காய் ஆகியவற்றை சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More