Thursday, January 3, 2013

பிரெட் தோசை


தேவையான பொருள்கள்:-
உப்பு உள்ள பிரெட் – 10நம்பர்
பச்சரிசி – 1கப்
பாசிப்பருப்பு – 1கப்
மிளகு – 2ஸ்பூன் பொடித்துக் கொள்ளவும்
பால் – 1கப்
சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கவும்
கொத்தமல்லி தழை – 1/4கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை:-
முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் 3மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அதனுடன் பிரெட், மிளகு, பால், தண்ணீர், உப்பு சேர்த்து மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு அடுப்பில் தோசைக்கல் காய்ந்ததும் சிறு சிறு வட்டங்களாக ஊற்றி இருபுறமும் நன்றாக எண்ணெய் ஊற்றி பொன்நிறம் மாறும் வரை வேக விடவும்.
நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
சுவையான பிரெட் தோசை தயார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More