Thursday, January 3, 2013

அடை தோசை


தேவையான பொருள்கள்:-
துவரம் பருப்பு – 1கப்
கடலைப் பருப்பு – 1கப்
பாசிப்பருப்பு – 1கப்
உளுந்தம் பருப்பு – 1கப்
பச்சரிசி – 3/4கப்
தேங்காய் – சிறிதளவு துருவியது
சின்ன வெங்காயம் – 1/2கப் பொடியாக நறுக்கியது
பூண்டு – 1நம்பர் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3நம்பர் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1கொத்து பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி தழை – 1/4கப் பொடியாக நறுக்கியது
சோம்பு – 1ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-
முதலில் பருப்புவகைகளையும் அரிசியையும் தனித்தனியே ஊற வைத்துக் கொள்ளவும். இன்று தோசை வார்க்க வேண்டும் என்றால் நேற்று இரவே ஊற வைத்து விடுங்கள்.
மிக்ஸியில் பருப்பு வகைகளை தேவையான தண்ணீர் விட்டு கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அரிசியையும் சோம்பயையும் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து சேர்த்து கலந்து கொள்ளவும். ஏனென்றால் பருப்புவகைகள் ஊறவைத்தால் சீக்கிரம் மைப்போல் அரைத்துவிடும். பருப்புவகைகள் மைப்போல் அரைத்தால் தோசைவார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சாப்பிடவதற்கும் நன்றாக இருக்காது.
பருப்புகலவையையும் அரிசிமாவையும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். தோசைமாவு பதத்திற்கு கலக்காமல் கொஞ்சம் கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி அடைமாவில் சேர்க்கவும்.
பின்பு தோசைக்கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி சிறிய வட்டமாக அடைமாவை ஊற்றி மூடியில் மூடவும். குறைந்த தணலில் வேக விடவும். மூடியை திறந்து மறு பக்கம் திருப்பி சிறிது எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
நன்றாக இரு பக்கமும் சிவந்து வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
சுவையான அடை தோசை தயார்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More