Tuesday, January 1, 2013

பச்சை சுண்டைக்காய் பிரியாணி

தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப், பச்சை சுண்டைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, பட்டை - ஒரு துண்டு, இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



 
செய்முறை: 

அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, உதிரியாக சாதம் செய்து கொள்ளவும். சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு விதையை நீக்கி எடுக்கவும். கடலைப்பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து . தண்ணீரை வடித்து மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயையும் அரைத்த பருப்பையும் ஆவியில் வேகவைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, நறுக்கிய இஞ்சியை வறுத்து, ஆவியில் வேக வைத்த சுண்டைக்காய் - பருப்பை சேர்த்து கரண்டியால் சுருள கிளறவும். நன்கு சேர்ந்து, வெந்து உதிரியாக வந்ததும் தீயை
குறைத்துவிட்டு, உதிரியாக செய்து வைத்துள்ள சாதத்தை போட்டு கலந்து, மிகக் குறைந்த தீயில் 2 நிமிடம் வைத்து கிளறினால்... பச்சை சுண்டைக்காய் பிரியாணி தயார்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More