Tuesday, January 1, 2013

கேபேஜ் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், முட்டை கோஸ் (நறுக்கியது) - ஒன்றரை கப், தக்காளி துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 செய்முறை: 

அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சீரகத்தை வறுக்கவும். அத னுடன் நறுக்கிய கோஸ், நறுக்கிய வெங்காயம், தக்காளி துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு கிளறவும். தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து, அதில் அரிசியைத் தண்ணீருடன் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து, நெய் விட்டு கலக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More