Tuesday, January 1, 2013

அன்னாசி, மிக்சட் ப்ரூட் ஜாம்.

அன்னாசி ஜாம்.
தேவையான பொருட்கள்:
அன்னாசிப் பழம் – 1
சர்க்கரை – 1 கிலோ
சிட்ரிக் ஆசிட் – 1 தேக்கரண்டி
அன்னாசி எசென்ஸ், மற்றும் லெமன் எல்லோ பவுடர் – சிறிதளவு
சோடியம் பென்சோயேட் – 1 சிட்டிகை.
 
செய்முறை:
அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
பழச்சாறு 1 லிட்டர் இருந்தால் 1 கிலோ சர்க்கரை என்ற விகிதத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து கிண்டவும்.
ஜாம் சரியான பதம் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னால் 1 தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட்சேர்த்து, பதம் வந்ததும் கீழே இறக்கி அதனுடன் அன்னாசி எசென்ஸ், லெமன் எல்லோ பவுடர்  சேர்த்து, ஒரு சிட்டிகை ‘சோடியம் பென்சொயேட்’ என்ற மருந்தைக் கலக்கவும்.
சுவையான அன்னாசி ஜாம் ரெடி.
மிக்சட் ப்ரூட் ஜாம்.
தேவையானவை:
ஆப்பிள், திராட்சை,மாம்பழம், கொய்யாப்பழம், அன்னாசி, வாழைப்பழம்,பப்பாளி, பேரிக்காய் ஆகியவற்றிலிருந்து, அப்போதைய பருவங்களில் எதெல்லாம் கிடைக்கிறதோ அந்தப் பழ வகைகளில் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவும்.
சீனி – 1 கிலோ
சிட்ரிக் ஆசிட் – 1 தேக்கரண்டி.
சோடியம் பென்சோயேட் – 1 சிட்டிகை.
எசென்ஸ் மற்றும் கலர் – தேவையானால்.
செய்முறை:
திராட்சைப் பழத்தில் இருந்து தனியே சாறு எடுத்துக் கொள்ள வெண்டும்.
ஆப்பிள் பழங்களை தோலுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். மற்ற பழங்களையும் சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்து பழக் கூழ் எடுத்துக் கொள்ளவும்.
பழச்சாறு 1 லிட்டர் இருந்தால் 1 கிலோ சீனி சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டவும்.
ஜாம் சரியான பதம் அடைவதற்கு 5  நிமிடங்களுக்கு முன்பு 1 தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். பதம் வரவும் கீழே இறக்கி தேவையானால் எசென்ஸ், கலர் பவுடர் சேர்த்து ஒரு சிட்டிகை சோடியம் பென்சோயேட் என்ற மருந்தை சேர்க்கவும்.
கலவைப் பழ ஜாம் ரெடி.
பின் குறிப்பு: ஜாம் வகைகள் கெட்டுப் போகா வண்ணம் பாதுகாக்கவே ‘சோடியம் பென்சோயேட்’  சேர்க்கப் படுகிறது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More