ரோஸ்டட் சேமியா (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது, சோம்பு - தலா கால் டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு - தலா ஒன்று, கேரட் துருவல், குடமிளகாய் துருவல், வெங்காய துருவல், தக்காளி துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வறுக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். பிறகு வெங்காயம், உப்பு சேர்த்துக் கிளறவும். வெங்காயம் வெந்ததும் மற்ற காய்களை போட்டு வதக்கவும். நன்கு வதங்கி வரும் சமயம் சேமியாவை சேர்த்து, சுடு தண்ணீர் விட்டு கலந்து கிளறவும். இறுகி வந்ததும் இறக்கி, கொத்தமல்லி, புதினா, தூவி அலங்கரித்தால்... குயிக் அண்ட் ஈஸி பிரியாணி தயார்.
ரோஸ்டட் சேமியா இல்லையென்றால், சேமியாவை வறுத்தும் செய்யலாம்.
0 comments:
Post a Comment