பாசுமதி அரிசி - ஒரு கப், பிரிஞ்சி இலை - ஒன்று, ஏலக்காய், கிராம்பு - தலா 2, பட்டை - ஒரு சிறு துண்டு, இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, முளைகட்டிய பச்சை பயறு, முளைகட்டிய வெந்தயம், முளைகட்டிய கொள்ளு எல்லாம் சேர்ந்து - ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு- ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் உதிரியாக சாதம் வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு வறுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு போட்டு கிளறவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது போட்டு கிளறவும். பச்சை வாசனை போனதும் முளைகட்டிய தானியங்களைப் போட்டு கிளறவும். தானியங்கள் வெந்ததும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து சாதம் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். நெய், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இறக்கவும். புதினா தூவி அலங்கரிக்கவும்.
0 comments:
Post a Comment