Thursday, January 3, 2013

கேரட் இனிப்பு அப்பம்


தேவையானவை:-
  • கேரட்- ​ 200 கிராம்
  • அவல் மாவு-​ 1 ஸ்பூன்
  • மைதா மாவு-​ ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-​ 50 கிராம்
  • சர்க்கரை-​ 50 கிராம்
  • பால்-​ 100 கிராம்
  • முந்திரி-​ திராட்சை-20
  • உப்பு-​ ஒரு சிட்டிகை
  • எண்ணெய்-​ 200 கிராம்.
செய்முறை:-
  • உளுத்தம் பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • கேரட்டைத் துருவிக் காய்ந்த திராட்சையுடன் சேர்த்து பாலுடன் கலந்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
  • உளுத்தம் பருப்பு நன்கு ஊறியவுடன் தண்ணீரை வடித்து வேக வைத்த கேரட் கலவை,​​ முந்திரி,​​ உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்க வேண்டும்.
  • அரைத்த விழுதில் சர்க்கரை,​​ மைதா மாவு,​​ அவல் மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் அப்பம் வடிவில் ஊற்றி வெந்து எடுக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More