Tuesday, January 1, 2013

பூண்டு ஊறுகாய்

தேவையான பொருட்கள்
  • உரித்த பூண்டு -1கப்
  • திக்கான புளிகரைசல் -1/2கப்
  • காய்ந்தமிளகாய் -4
  • மிளகாய்தூள் -4ஸ்பூன்
  • கறிவேப்பிலை -1கைப்பிடி அளவு
  • வெந்தயபொடி -1ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • கடுகு -1ஸ்பூன்
  • சன்பிளவர் ஆயில்-1/2கப்
 செய்முறை
  • பூண்டை தட்டிவைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன், காய்ந்தமிளகாயை கிள்ளி போட்டு,கறிவேப்பிலை போடவும்.
  • பூண்டை சேர்த்து நன்றாக வேகவிடவும்.பூண்டு வெந்தவுடன்,புளிக்கரைசலை ஊற்றி மிளகாய்தூள்,வெந்தயபொடி போட்டு நன்றாக வதக்கவும்.
  • உப்பு சேர்க்கவும்.கலவை நன்றாக கொதித்து தொக்குபதம் வந்தவுடன் இறக்கவும்.
  • நன்றாக ஆறவைத்து ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More