Tuesday, January 1, 2013

எலுமிச்சை ஊறுகாய்

தேவையான பொருட்கள்
  • எலுமிச்சம்பழம் - 1/2 கி
  • மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
செய்முறை
  • முதலில் எலுமிச்சம்பழத்தை குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி 3 விசில் வர விடவும்
  • பிறகு எலுமிச்சம்பழத்தை எடுத்து நான்காகவோ அல்லது 8 ஆகவோ வெட்டி வேகவைத்த தண்ணீருடன் போட்டு அதில் மிளகாய் பொடி, உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்
  • பிறகு வேறொரு வாணலியில் கடுகை போட்டு பொரித்து அதனுடன் பெருங்காயத்தையும் போட்டு பொரித்து எலுமிச்சம்பழத்தையும் பொட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடலாம்
  • இந்த ஊறுகாய் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும் அவ்வபொழுது வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More