Thursday, January 3, 2013

பூரிக்​கும் பூரி!


தேவை​யான பொருட்​கள்:
கோதுமை மாவு -​ ஒரு கப்
மைதா மாவு -​ ஒரு டேபிள் ஸ்​பூன்
சீரக பொடி -​ ஒரு சிட்​டிகை
உப்பு -​ தேவை​யான அளவு
சர்க் ​கரை -​ ஒரு சிட்​டிகை
எண்​ணெய் -​ ஒரு டேபிள் ஸ்​பூன்
எண்​ ணெய் -​ பொரிப்​ப​தற்கு.​
வெது​வெ​துப்​பான நீர் -​ மாவு பிசை​வ​தற்கு


செய்​முறை:
கோதுமை மாவை​யும்,​மைதா​வை​யும் ஒன்​றாகக் கலந்து சீரக பொடி,​உப்பு,​சர்க்​கரை சேர்த்து கலக்​க​வும்.​
நீரை கொஞ்​சம் கொஞ்​ச​மாக ஊற்றி சப்​பாத்தி மாவு பதம் போல் பிசை​ய​வும்.​
பிசைந்த மாவில் எல்லா பகு​தி​க​ளி​லும் எண்​ணெய்​(ஒரு டேபிள் ஸ்​பூன்)​ படு​மாறு தட​வ​வும்.​
ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் ​ வைக்​க​வும்.​
எண்​ணையைக் கடா​யில் ஊற்றி மித​மான தீயில் சூடாக்​க​வும்.​
மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி தேய்க்​க​வும்.​
(மாவு சம​மாக இருக்க வேண்​டும்)​ எண்​ணெய் நன்​றாக சூடா​ன​தும் தேய்த்து வைத்​துள்ள பூரியை போட்டு லேசாக கரண்​டி​யால் பூரி ஓரங்​க​ளில் அழுத்​த​வும்.
இப்​படி செய்​வ​தால் உண​வ​கத்​தில் தரும் பூரியைப் போல பூரித்து இருக்​கும்.​

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More