Thursday, January 3, 2013

பலாச்சுளை அல்வா


தேவையான பொருட்கள்:
  • நாரில்லாத பலாச்சுளை-15
  • சர்க்கரை-200 கிராம்
  • முந்திரிப் பருப்பு-20
  • ஏலக்காய் பொடி செய்தது- கால் டீ ஸ்பூன்
  • நெய்-50 கிராம்

எப்படிச் செய்வது?
  • பலாச்சுளைகளை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு நறுக்கிய பலாச்சுளைகளைப் போட்டு வதக்க வேண்டும்.
  • நன்றாகப் பதம் ஆனவுடன் இறக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
  • முந்திரிப் பருப்பை நெய்விட்டு வறுத்துக் கொண்டு, மீதி உள்ள நெய்யையும்விட்டு நன்றாகக் கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி, வறுத்த முந்திரிப் பருப்பைப் போட்டு கிளறி வைக்க வேண்டும்.
  • இப்போது கமகமக்கும் சுவையான பலாச்சுளை அல்வா ரெடி.
  • சுவைக்குச் சுவை…ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More