Tuesday, January 1, 2013

புளியாணம்

தேவையான பொருட்கள்
  • புளி - எலுமிச்சை அளவு
  • சீரகம்- 1ஸ்பூன்
  • சோம்பு- 1ஸ்பூன்
  • மிளகு- 1ஸ்பூன்
  • ப.மிளகாய்- 1
  • சி.மிளகாய் - 2
  • க.பிலை- ஒரு கொத்து
  • பூண்டு- 1
  • சி.வெங்காயம் - 2
  • மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்
  • தக்காளி - 2
  • உப்பு - தேவைக்கு
  • கடுகு - 1/2ஸ்பூன்
  • தேங்காய்ய்- 1துண்டு
  • எண்ணெய் - 2ஸ்பூன்
செய்முறை
  • புளியை தண்ணீரில் ஊறவைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
  • புளி கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்
  • உரலில் சீரகம், சோம்பு,மிளகு போட்டு இடித்து தூளக்கி புளி கரைசலில் போடவும்
  • அதே உரலில் வெங்காயம், ப.மிளகாய், வத்தல், தேங்காய்துண்டு, க.பிலை,பூண்டு போட்டு தட்டி புளி கரைசலில் சேர்க்கவும்
  • இந்த கரைசலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போடவும்.
  • தக்காளியை பிழிந்து விடவும்.
  • நன்றாக கலக்கவும்

  • ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, க.பிலை போது தாளிக்கவும்
  • பிறகு புளி கரைசலை ஊற்றி சூடு பண்னவும். கொதி வரும் முன்பு இறக்கவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More