Tuesday, January 1, 2013

கத்தரிக்காய் கூட்டு

  • தேவையானப் பொருட்கள்
  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • பச்சைப்பருப்பு (அல்லது) பாசிப்பருப்பு - 100 கிராம்
  • வெங்காயம் - 50 கிராம்
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
  • கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
 செய்முறை
  • பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். கத்தரிக்காயை பொடியாக நறுக்கி பருப்பில் போடவும். அதனுடன் சீரகம், வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வேகவிடவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்தவுடன் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கூட்டில் கொட்டவும், தேவையென்றால் 2 சில் தேங்காய் அரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More