Tuesday, January 1, 2013

வாழைத்தண்டு கூட்டு

தேவையானப் பொருட்கள்
  • வாழைத்தண்டு - ஒன்று
  • வெங்காயம் - ஒன்று
  • பாசிப்பருப்பு - ஒரு கப்
  • பச்சைமிளகாய் - இரண்டு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • பெருஞ்சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • தேங்காய்ப்பால் - அரைகப்
  • எண்ணெய் - தாளிக்க
  • உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை
  • வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு கழுவி எடுக்கவும்.
  • பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் பச்சைமிளகாய், பெருஞ்சீரகத்தூள், மஞ்சள்தூள் போட்டு கிளறி வாழைப்பூவை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • வெந்ததும் வேகவைத்த பருப்பை போட்டு கிளறி தேங்காய்ப்பால் ஊற்றி திக்காக வந்ததும் இறக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More