Tuesday, January 1, 2013

முருங்கைக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்
  • முருங்கைக்காய் - 2
  • சிறுப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 100 கிராம்
  • வரட்டிய இறால் - 7
  • மசாலா தூள் - 1/2 மேசைக் கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
  • முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும்.
  • தேங்காய் துருவலை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் .
  • முருங்கைக்காயில் வெங்காயம், இறால், சிறுப்பருப்பு, மசாலா தூள், அரைத்த தேங்காய் விழுது, உப்பு போட்டு வைக்கவும்.
  • அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் மசாலா சேர்த்து வைத்துள்ள முருங்கைக்காய்களை கொட்டவும். நன்றாக பிரட்டி விட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேக விடவும்.
  • காய் வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More