தேவையான பொருட்கள்
செய்முறை
- பலாக்காய் - சின்ன பிஞ்சு (1/4 கிலோ)
- கடலைப்பருப்பு - 100 கிராம்
- மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
- தேங்காய் - 2 சில்
- சீரகம் - அரை தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 5
- கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- வெங்காயம் - 10
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
- தேங்காய் சில், சீரகம், பச்சைமிளகாய் ஆகியவற்றை மையாக அரைக்கவும்.
- கடலைப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
- பலாக்காயை பொடியாக நறுக்கி உப்பு போட்டு வேக விட்டு தண்ணீரை வடித்து விடவும்.
- பருப்பில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த காய், அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கொட்டி கொதித்ததும் இறக்கவும்.
Posted in: கூட்டு வகைகள்
0 comments:
Post a Comment