Tuesday, January 1, 2013

பாகற்காய் கூட்டு

தேவையான பொருட்கள்
  • பாகற்காய் - 100 கிராம்
  • புளிகரைச்சல் - 2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்ப்பொடி - 1/2 டீஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • பச்சைமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு
  • வெல்லம் - சிறுதுண்டு
செய்முறை
  • பாகற்காயை நடுவில் நறுக்கி, கத்தியால் விதைகளை நீக்கிக்கொள்ளவும். இதனை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு வாணலியில் போட்டு எண்ணெய் விட்டு வதக்கவும்.
  • அத்துடன் நறுக்கிய பாகற்காய் சேர்த்து கிளறவும்.
  • மசாலாபொடிகள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • புளிகரைச்சலுடன் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்ததும், தேங்காய்ப்பால், சிறிது நீர் சேர்த்து அடுப்பை சிறுதீயில் வைக்கவும்.
  • பாகற்காய் வெந்து, நீரும் வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விடவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More