Tuesday, January 1, 2013

சௌத் இண்டியன் பிரியாணி

தேவையானவை: 

பாசுமதி அரிசி - ஒரு கப், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், டபுள் பீன்ஸ், ஆனியன், தக்காளி துண்டுகள் எல்லாம் சேர்த்து - 2 கப். புளிக்காத தயிர், பால் - தலா அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - மூன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பிரெட் துண்டுகள் - ஒரு கப், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
 

அரைக்க: 

சிவப்பு மிளகாய் - 2, தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், கிராம்பு - 2, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: 

அரிசியைக் கழுவி, ஒரு கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள் போட்டு கிளறவும். பச்சை மிளகாய், அரைத்த வைத்துள்ள விழுது சேர்த்து, அரிசியை தண்ணீருடன் சேர்க்கவும். தயிர், பால் விட்டு கலந்து, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும். ஆறியதும் திறந்து, நெய் விட்டு கலக்கவும். பிரெட் துண்டுகளை எண்ணெயில் வறுத்துக் கலந்தால்... சௌத் இண்டியன் பிரியாணி தயார்.
இதற்கு சிப்ஸ், அப்பளம், பச்சடி தொட்டுக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More