Tuesday, January 1, 2013

காலிஃப்ளவர் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர் துண்டுகள் - 2 கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


 செய்முறை: 

பாசுமதி அரிசியைக் கழுவி, 2 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு கலந்து 5 அல்லது 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு, சூடானதும் வெங்காயத் துண்டு களைப் போட்டு கிளறவும். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் குக்கரில் சேர்க்கவும். காலிஃப்ள வர் கலவையையும் அதில் சேர்த்து மூடி, 2 விசில் வந்தவுடன் இறக்க வும். புதினா இலை தூவிக் கலந்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More