அத்திப்பழம் - 1 கப்,
வாழைப்பழம் - 1,
பால் - 1 கப், நெய் - 1 கப்,
சர்க்கரை - 1 கப்.

எப்படிச் செய்வது?
அத்திப்பழத்தை பால் சேர்த்து வேக விடவும். வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்திப்பழக் கூழுடன் சேர்த்து மீண்டும் மசிக்கவும். கடாயை சூடாக்கி, சர்க்கரை சேர்த்து இளம் பாகு காய்ச்சவும். அதில் மசித்த பழக்கலவை சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறவும். கலவை நன்கு சுருண்டு வரும் போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, மெலிதான, சதுரத் துண்டுகள் போடவும். காய்ந்த அத்திப்பழம் என்றால் அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்துப் பின் மசிக்கவும். அத்திப்பழம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.



0 comments:
Post a Comment