Thursday, January 3, 2013

சம்பா கோதுமை அல்வா


தேவையானவை:


  • சம்பா கோதுமை – ஒரு கப்
  • சர்க்கரை – ஒன்றரை கப்
  • நெய் – ஒரு கப்
  • முந்திரி – 10
  • ஏலக்காய் – 5
  • புட் கலர் ஆரஞ்சு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
  • கோதுமையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட்டு, மறுநாள் கிரைண்டரில் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை கட்டி வைத்துவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி, பாலை வடிகட்டவும்.
  • மேலே தங்கும் சக்கையை பிழிந்து எடுத்து, அதை மீண்டும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • இப்படியே நான்கு முறை கோதுமை ஜவ்வு போல வரும்வரை அரைத்து அரைத்து துணியில் ஊற்றி, வடிகட்டி பால் எடுக்கவும்.
  • இந்த பாலை அப்படியே மூடி வைத்தால், 6 அல்லது 7 மணி நேரம் கழித்து நன்கு தெளிந்து மேலே தண்ணீர் நிற்கும்.
  • அந்த தண்ணீரை வடித்துவிட்டு, கீழே தங்கியிருக்கும் மாவு பகுதியை எடுத்து அதில் ஆரஞ்சு கலரை கலந்து வைக்கவும்.
  • அடி கனமான பாத்திரம் ஒன்றில் சர்க்கரையை போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வந்ததும் கோதுமை பாலை, சர்க்கரை பாகில் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  • நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும் முந்திரியை முழுதாக நெய்யில் வறுத்துபோட்டு, ஏலக்காயை பொடித்து போட்டு கிளறவும்.
  • சுற்றிலும் நெய் கக்கி, அப்படியே கசிந்து, அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
  • அந்த சமயத்தில் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More