Thursday, January 3, 2013

கோங்குரா பிரியாணி


தேவையான பொருட்கள்:
  • பாஸ்மதி அரிசி – ஒரு கப்
  • கெட்டி தயிர் – ஒரு கப்
  • தண்ணீர் – ஒரு கப்
  • காய்கறி துண்டுகள் – 2 கப்(உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ்)
  • இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • வதக்கிய கோங்குரா – ஒரு கப்
  • பூண்டு – 6 பல்
  • உப்பு தேவையான அளவு
  • புதினா இலை, கொத்துமல்லி தழை தலா ஒரு டேபிள் ஸ்பூன்.
அரைத்துக்கொள்ள:
  • முந்திரிப் பருப்பு 25 கிராம்
  • சிறிய வெங்காயம் – 7
  • இஞ்சி – சிறிது
  • பச்சைமிளகாய் – 8
  • பட்டை, லவங்கம் – 2
  • ஏலக்காய் – 2.
செய்முறை:
  • குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • அதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய காய்கறிகள், வதக்கிய கோங்குரா, அரைத்த மசாலா சேர்த்து மிதமான தணலில் கிளறவும்.
  • தயிரை குக்கரில் ஊற்றவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் பாஸ்மதி அரிசி உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிட்டு, வெயிட் போடவும்.
  • குறைந்த தணலில் பத்து நிமிடம் வேக வைத்து அடுப்பிலிருந்து கீழே இறக்கவும்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More