Tuesday, January 1, 2013

மெர்ரி கேக்

தேவையான பொருட்கள்
  • மைதா - 250 கிராம்
  • ஐசிங் சுகர் - 250 கிராம்
  • பட்டர் - 250 கிராம்
  • பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • முட்டை - 5
  • கிஸ்மிஸ் - 50 கிராம்
  • செர்ரி பழம் - 50 கிராம்
  • ஆரங்சு பழத்தோல் - 5 கிராம்
  • முந்திரி பருப்பு - 50 கிராம்
செய்முறை
  • முதலில் மைதா,பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்துவைக்கவும்.
  • முட்டைகளை அடித்து வெள்ளைகரு,மஞ்சள்கரு ஆகியவற்றை தனித்தனியாக எடுத்துவைக்கவும்.
  • பட்டர், ஐசிங் சுகர், முட்டையின் மஞ்சள்கரு ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
  • கிஸ்மிஸ், செர்ரி பழம்.ஆரஞ்சு பழ தோல் ,முந்திரி இவற்றை சிறிதாக நறுக்கிவைக்கவும்.
  • சீனிக்கலவையில் சிறிது சிறிதாக மாவையும்,வெள்ளைக்கருவையும் சேர்த்து நன்கு கலக்கி கொண்டே இருக்கவும்.
  • பின் நறுக்கிய முந்திரி,கிஸ்மிஸ்,ஆரஞ்சு பழ தோல், செர்ரி இவற்றை கலக்கவும்.
  • கேக் ட்ரேயில் சிறிது பட்டர் தேய்த்து இந்த கலவையை ஊற்றி ஓவனில் மீடியம் ஹீட்டில் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More