தேவையான பொருட்கள்
- கேரட் - 100 கிராம்
- பீன்ஸ் - 100 கிராம்
- உருளைக்கிழங்கு - 2
- பச்சை மிளகாய் - 4
- சௌசௌ - 1
- பெங்களூர் தக்காளி - 100 கிராம்
- மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 100 கிராம்
- கடுகு - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- காய்களை நன்றாகக் கழுவி துடைத்து சிறிது சிறிதாய் வெட்டிக்கொள்ளவும்.
- பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகை பொரித்து எடுக்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் வெட்டிய காய்களை எண்ணெய்யில் போட்டு நன்றாக வதக்கவும்.
- பாதி வதங்கிய பிறகு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காய பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- காய்கள் நன்றாக வதங்கியவுடன் எண்ணெய் தளர்ந்துவர ஆரம்பிக்கும்.
- காய்கள் வெந்தவுடன் ஆறவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
Posted in: ஊறுகாய் வகைகள்




0 comments:
Post a Comment