தேவையானவை :
முழு கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.
தடவுவதற்கு:
மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்,
சாட் மசாலா - அரை டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஆரிகனோ - அரை டீஸ்பூன்.
பூரணத்துக்கு:
முளைவிட்ட பயறு - கால் கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப்,
மாதுளை விதைகள் (விருப்பப்பட்டால்) - கால் கப்,
இனிப்பு, புளிப்பு சட்னி - கால் கப் (செய்முறை தனியே).
செய்முறை :
கோதுமை மாவில் உப்புச் சேர்த்து சிறு புல்காக்களாகச் செய்து கொள்ளவும். தடவக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அடித்துக் கலந்து வைக்கவும். பூரணத்துக்கான பொருள்களை ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவும். பேக்கிங் தட்டில், புல்காக்களை வைத்து, அவற்றின் மேல் அடித்த கலவையைத் தடவி, மைக்ரோவேவ் அவனில், கிரில் மோடில் வைத்து, லேசாக பிரவுன் நிறம் வரும் வரை 2 அல்லது 3 நிமிடங்கள் கிரில் செய்யவும். பயறு பூரணத்தை அதன் மேல் பரப்பி, ரோல் செய்து, கெச்சப்புடன் பரிமாறவும்.
இனிப்பு-புளிப்பு சட்னி:
10 முதல் 12 பேரீச்சம் பழங்களை, கொட்டைப்பாக்களவு புளியுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இன்னும் இனிப்பு தேவைப்பட்டால், சிறிது வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவிட்டு, அதையும் அரைத்ததுடன் சேர்த்து, சிறிது தண்ணீரும் விட்டுக் கலக்கிக் கொள்ளலாம்.

0 comments:
Post a Comment