தேவையான பொருட்கள்
எண்ணெய்-1/2 கப்
முட்டை-2
பால்-1கப்
வெனிலா எசென்ஸ்-1டீஸ்பூன்
மைதா-1 3/4 கப்
சர்க்கரை-1 1/2
கோக்கோ-1/2 கப்
சமையல் சோடா-1 1/4 டீஸ்பூன்
உப்பு-1 சிட்டிகை
பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஓவனைச் சூடாக்கி ரெடியாக வைக்கவும்.
1.மைதா, சமையல் சோடா, கோக்கோ, உப்பு, பேக்கிங் பவுடர் முதலியவற்றை சேர்த்து இரண்டு மூன்று முறை சலிக்கவும்.
2.பால், சர்க்கரை, முட்டை, எண்ணெய் இவற்றோடு வெனிலா எசென்ஸைச் சேர்த்து கைவிடாமல் நுரைக்க அடிக்கவும்.
3.சலித்த மாவைச் சிறிது சிறிதாக முட்டைக் கலவையில் சேர்க்கவும்.
4.இந்த கேக் கலவையை, தயாராக வைத்துள்ள பேக் செய்யும் பாத்திரத்தில் கொட்டி பேக் செய்யவும்.
0 comments:
Post a Comment