Monday, January 7, 2013

கடலைப் பாயசம்


தேவையானவை:

கடலைப்பருப்பு-1/4கிலோ
வெல்லம்-3/4 கிலோ
தேங்காய்-2
முந்திரி-50 கிராம்
திராட்சை-25 கிராம்
ஏலக்காய்-சிறிதளவு


செய்முறை;-
கடலைப்பருப்பை கழுவிக்கொள்ளுங்கள். வாணலில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் கடலைப் பருப்பைப்
போட்டு  வேக வையுங்கள். பருப்பு மலர்ந்து வந்ததும் எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காயைத் துருவி முதல் பால் கால் லிட்டரும், இரண்டாம் பால் முக்கால் லிட்டரும் எடுத்துக்
கொள்ளுங்கள். வெல்லத்தில் போதிய அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். வெல்லம் கரைந்து
பாகாகியதும் வடிகட்டி அரைத்த பருப்பை கொட்டி இரண்டாம் பாலை ஊற்றிக் கிளறுங்கள். பால் வற்றி வரும்
நேரத்தில் முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கி
விடுங்கள். கடலைப் பாயசம் ரெடி.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More